செய்திகள் மாநில செய்திகள் கிப்ட் ஷாப் பெயரில் தங்க கடத்தல்…. 2 மாதத்தில் 167 கோடி ரூபாய்….!! Inza Dev16 July 20240115 views சென்னை விமான நிலையத்திற்குள் பரிசு பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி நூதனமாக தங்கம் கடத்திய முகமது சபீர் அலி என்பவர் உள்ளிட்ட 8 பேர் சமீபத்தில் கைது கைது செய்யப்பட்டனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 167 கோடி ரூபாய் மதிப்புள்ள 267 கிலோ தங்கத்தை அவர் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த முக்கிய புள்ளிக்கு தொடர்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில் தங்கம் கடத்தல் தொடர்பாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தங்க கடத்தலுக்கு உதவியதாக விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.