கோயம்புத்தூர் செய்திகள் மாவட்ட செய்திகள் சிக்கிய கஞ்சா, போதை மாத்திரைகள்… 6 பேர் கைது… போலீஸ் அதிரடி…!! Revathy Anish19 August 20240106 views கோவை மாவட்டம் ஏ.ஜி.புதூர் அருகே உள்ள குறும்பபாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தபித்யாதார் குர்லா, சுசில்தீப் மற்றும் 15 வயது சிறுவர்கள் இரண்டு பேர் என தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் 3 கிலோ 100 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்த நிலையில், அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். இதேபோல் நவஇந்தியா பகுதியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஜெய்ஹிந்த், விபீஷணன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திய வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.