செய்திகள் நீலகிரி மாவட்ட செய்திகள் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்… விரைந்த மீட்பு குழுவினர்… நீலகிரியில் தீவிரமடையும் மழை…!! Revathy Anish17 July 2024092 views நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி குன்னூர் கோத்தகிரி கூடலூர் பந்தலூர் தேவாலம் ஆகிய பகுதிகள் மழை தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அதிக அளவில் பெய்து வருகிறது. மாவட்டத்தில் பல பகுதிகளில் ஒரே நாளில் 10 செ.மீ அதிகமான மழை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கேரட், பூண்டு உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து ஊட்டியில் பெய்த கனமழை காரணமாக நகரின் மையப்பகுதியில் இருந்த ராட்சத மரம் ஒன்று முறிந்த சாலையில் விழுந்தது. இதனால் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கூடலூர் தொரப்பள்ளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் அப்பகுதியில் இருந்த மூங்கில் மரங்களும் கொத்துக் கொத்தாக மின் கம்பங்களில் விழுந்ததால் மின் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நீலகிரிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் சென்று பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.