செய்திகள் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் தமிழகத்தில் முதல் வழக்கு… புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு… காவல்துறையினர் தகவல்…!! Revathy Anish2 July 2024085 views நாடு முழுவதிலும் புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்ட நிலையில் பல காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னையில் முதன் முதலாக புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் உத்தமர் சாலையில் 2 வாலிபர்கள் நடந்து சென்று கொண்டிருக்கும் போது இருசக்கரவாகனத்தில் வந்த 2 நபர்கள் அவர்களை வழிமறித்து மிரட்டி செல்போன்களை பறித்துக்கொண்டு சென்றனர். இதுகுறித்து அந்த வாலிபர்கள் ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகார் புதிய குற்றவியல் சட்டம் 304(2) என்ற சட்டப்பிரிவில் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கிற்கு நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்பட்டால் பழைய சட்டப்பிரிவுகளின் கீழ் தான் எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.