செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் கட்டுப்பாடுகளுக்கு நடுவே உண்ணாவிரதம்… 2,000 பேர் பங்கேற்பு… அ.தி.மு.க போராட்டத்தில் போலீஸ் குவிப்பு…!! Revathy Anish27 June 2024086 views சட்டசபை கூட்டத்தொடர் நடந்த போது அ.தி.மு.க கட்சியினர் கள்ளக்குறிச்சி சம்பவத்தை பற்றி விவாதிக்க வேண்டும் என கடும் அமளியில் ஈடுபட்டனர். அதனால் அவர்களை அவை தலைவர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதனை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பேனர், கொடி கட்டுவது, தனிமனிதரை தாக்கி பேசுவது, உருவ பொம்மை எரிப்பது ஆகியவை செய்யக்கூடாது என 23 கட்டுப்பாடுகளை போலீசார் விதித்தனர். இந்த கட்டுப்பாடுகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 61 பேருமே கலந்து கொண்ட நிலையில் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர். மேலும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொடர்கள் என 2,000 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் பாதுகாப்பு பணியில் அப்பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிந்துள்ளனர்.