செய்திகள் மாநில செய்திகள் கனிமவளங்கள் எடுப்பதை தடுக்க வேண்டும்… அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கூட்டம்…!! Revathy Anish20 July 20240100 views சென்னை தலைமையகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை செயல்பாடுகள், முன்னேற்றம் குறித்த கூட்டம் நடைபெற்றது. அப்போது சுரங்கம் மற்றும் குவாரி நடத்துவர்களிடம் இருக்கும் நிலுவைத் தொகைகளை வசூல் செய்யவும், கனிமவளத்துறையின் வருவாயை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும் பதிவு செய்யப்படாமல் இயங்கும் செங்கல் சூளைகள், எம் சாண்ட், கிராஷர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கவும், சட்டவிரோதமாக கனிம வளங்களை எடுத்து செல்வதை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த கூட்டத்தில் இயற்கை வளங்கள் கூடுதல் துறை தலைமைச் செயலாளர் பணீந்தர் ரெட்டி, கனிமவளத்துறை ஆணையர் சரவணவேல் மற்றும் உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.