செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடித்த வெடி… 2 பேர் துடிதுடித்து உயிரிழப்பு… சிவகாசி அருகே சோகம்…!! Revathy Anish9 July 20240128 views விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளையார் குறிச்சி பகுதியில் சுப்ரீம் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று வழக்கம்போல பட்டாசு ஆலை குடோனியில் உள்ள வெடி அறையில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தினால் அறையில் இருந்த மற்ற வெடிகளும் வெடிக்க தொடங்கின. இதனால் அறையில் இருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து பதறி வெளியே ஓடினர். ஆனால் மாரியப்பன்(45), முத்துமுருகன்(45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் சரோஜா(55), சங்காரவே(54) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த எம்.புதுப்பட்டி தீயணைப்பு துறையினர் சுற்றுவட்டத்தில் இருக்கும் தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.