செய்திகள் ட்ரெண்டிங் தேசிய செய்திகள் பல்சுவை மின் கட்டணம் 45,491 ரூபாயா….? வைரலான புகைப்படம்…. நெட்டிஷன்கள் ஷாக்….!! Inza Dev26 June 20240105 views அரியானா மாநிலம் குருகுராம் பகுதியை சேர்ந்த ஜஸ்வீர்சிங் என்பவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது அவர் பணம் அனுப்பும் செயலி மூலமாக அவர் செலுத்திய மின் கட்டணத்தின் ஸ்கிரீன்ஷாட் ஆகும். அந்த ஸ்கிரீன்ஷாடின் படி கடந்த இரண்டு மாதத்தில் 45,491 ரூபாயை மின் கட்டணமாக செலுத்தியுள்ளதாகவும் மின் கட்டணத்தின் உயர்வு காரணத்தினால் மெழுகுவர்த்திக்கு மாறிவிடலாம் என்று சிந்திப்பதாகவும் பதிவிட்டு இருந்தார். ஜஸ்வீர்சிங்கின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.