கோயம்புத்தூர் செய்திகள் மாவட்ட செய்திகள் போதைப் பொருளை கொண்டு வரக்கூடாது … போலீசார் அதிரடி சோதனை… சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு…!! Revathy Anish5 July 20240106 views கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப், சின்னகல்லார், கவியருவி போன்ற சுற்றுலா தளத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர் கள்ளச்சாராயம் மாற்றும் போதை பொருட்களை ரகசியமாக கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ஆழியார் சோதனைச்சாவடி மற்றும் சேத்துமடை சோதனை சாவடியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் சுற்றுலா தலங்களுக்கு வருபவர்கள் சட்டத்திற்கு புறம்பான பொருட்களை கொண்டு செல்ல தவிர்க்க வேண்டும் என கூறினர். மேலும் சோதனைச்சாவடியில் அனைத்து வாகனங்களையும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்த பிறகே அனுப்புவதாக தெரிவித்தனர்.