செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம் தி.மு.க.- நாம் தமிழர் கட்சி… பிரச்சாரத்தின் போது தகராறு… விக்கிரவாண்டி அருகே பரபரப்பு…!! Revathy Anish6 July 2024080 views விக்கிரவாண்டி தொரவி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் தி.மு.க.வினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அதே பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியினரும் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் தி.மு.க. பிரச்சாரம் செய்து கொண்டிருந்த இடம் அருகே நின்று அவர்களுக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் இரு கட்சினரிடம் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.