அரசியல் செய்திகள் செய்திகள் மக்களுக்கு சுமையை கொடுக்கும் அரசு தி.மு.க…. ஓ. பன்னீர் செல்வம் பேட்டி…!! Revathy Anish22 July 20240353 views திமுக அரசு மின் கட்டணத்தை ஏற்றி மக்களுக்கு சுமையை கொடுப்பதாக முன்னால் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் அவர்கள் திமுக அரசு பாமர மக்கள் முதல், மேல் தட்டு மக்கள் வரை அனைவருக்கும் மிகப்பெரிய சுமையை கொடுத்துள்ளதாக தெரிவித்தார். அம்மா உணவகத்திற்கு 21 கோடி ரூபாய் முதலீடு செய்தது குறித்து பன்னீர்செல்வம் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு, அம்மா உணவகம் மட்டுமல்லாமல் அனைத்து காலத்திட்டங்களுமே திமுக அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.