கிருஷ்ணகிரி செய்திகள் மாவட்ட செய்திகள் ஒகேனக்கல் திட்ட குழாயில் இருந்து நேரடி பைப் லைன்… ஆத்திரமடைந்த பொதுமக்கள்… போலீசார் பேச்சுவார்த்தை…!! Revathy Anish30 June 2024077 views கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகரம் கிராம ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அவரது வீட்டிற்க்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் இருந்து நேரடியாக 2 இன்ச் பைப் அமைத்துள்ளார். இதனை அறிந்த ஊர் மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் அளித்ததன் பேரில் அவர் அந்த பைப் லைனை துண்டித்துள்ளார். ஆனால் துணைத்தலைவர் மீண்டும் இரவோடு இரவாக அதே இடத்தில் பைப் லைன் அமைத்தார். ஏற்கனவே ஊராட்சி துணை தலைவரை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரி குடிநீர் குழாயில் இருந்து நேரடியாக தண்ணீர் எடுப்பது சட்டப்படி குற்றம் என அவரை எச்சரித்துள்ளார். எனவே அவர் மீண்டும் இப்படி செய்ததை அறிந்த ஊர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இனிமே இதுபோல் அவர் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.