செய்திகள் தூத்துக்குடி மாவட்ட செய்திகள் திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்… வரிசையில் நின்று தரிசனம்…பாதுகாப்பு பணியில் போலீசார்…!! Revathy Anish7 July 2024085 views திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் கடலில் நீராடி அங்குள்ள நாழி கிணறுகளில் புனித நீராடி கோவிலுக்கு சென்று 4 மணிநேரம் வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டு வருகின்றனர். மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாமல் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலையில் உள்ள தனியார் இடத்தில் அதற்க்கான ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.