இராமநாதபுரம் செய்திகள் மாவட்ட செய்திகள் ராமேஸ்வரத்திற்கு படையெடுத்த பக்தர்கள்… விடுமுறை தினத்தில் கொண்டாட்டம்… போலீசார் குவிப்பு…!! Revathy Anish13 July 2024076 views ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு படையெடுத்துள்ளனர். மேலும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடியும், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் வந்தனர் . இதனையடுத்து கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ராமேஸ்வரத்தை சுற்றியுள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் சென்று கண்டுகளித்து வருகின்றனர். அதிகளவில் பக்தர்கள் கூட்டம் இருப்பதால் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.