ஈரோடு செய்திகள் மாவட்ட செய்திகள் மூலிகை செடிகளுக்கு நடுவே கஞ்சா வளர்ப்பு… சித்த வைத்தியர் உள்பட 2 பேர் கைது… போலீசார் அதிரடி…!! Revathy Anish1 July 2024092 views ஈரோடு மாவட்டம் எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் சித்த வைத்தியரான மாரப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரும், இவரது மகன் கருப்பசாமியும் சேர்ந்து வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடியை வளர்த்து வந்தனர். இதுகுறித்து மதுவிலக்கு போலீசாருக்கு புகார் வந்த நிலையில் உடனைடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாரப்பன் தோட்டத்தில் மூலிகை செடிகளுடன் 11 கஞ்சா செடி இருப்பது தெரியவந்தது. அதனை அழித்த போலீசார் மாரப்பன் மற்றும் அவரது மகன் கருப்பசாமியை கைது செய்தனர். இந்நிலையில் கஞ்சா பயிரிடுதல், போதை பொருள் தயாரிப்பு தொடர்பான வழக்குகளில் ஈடுபடுபவர்களுக்கு 1 லட்சம் வரை அபராதமும், 3ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.