கள்ளக்குறிச்சி செய்திகள் மாவட்ட செய்திகள் விசாரணைக்கு வந்த கள்ளச்சாராய வியாபாரி… தப்பியோடியதால் பரபரப்பு… 3 போலீசார் அதிரடி மற்றம்…!! Revathy Anish28 June 2024085 views கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 86 பேரை கைது செய்த நிலையில் சங்கராபுரம் காவல்துறையினர் சேஷசமுத்திரம் பகுதியை சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரியான மணிகண்டன் என்பவரை விசாரிப்பதற்காக அழைத்து சென்றனர். இந்நிலையில் அவர் காவல் நிலையத்தில் இருந்தபோது திடீரென அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக அவரை துரத்தி சென்றனர். அதற்குள் அவர் தப்பியோடியதால் காவல்துறையினர் மணிகண்டனை வலைவீசி தேடி வருகின்றனர். இதனையறிந்த மாவட்ட சூப்பிரண்டு போலீஸ் ரஜித் சதுர்வேதி மணிகண்டனை கண்காணிக்க தவறிய சங்கராபுரம் போலீசார் 3 பேரை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.