தொடரும் அட்டகாசம்… மீனவர்களின் வழக்கை ரத்து செய்ய கோரிக்கை… கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் அறிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டை பட்டினத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 13 பேரை நெடுந்தீவு அருகே வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கடந்த 1 மாதத்தில் 26 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுபோன்ற இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கைதாகியுள்ள தமிழக மீனவர்கள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்து, விசைப்படகுகளையும் மீட்க வேண்டும் என மத்திய அரசு மாற்று அயலுறவு துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மீனவர்களின் மீன்பிடி உரிமையையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!