செய்திகள் சேலம் மாவட்ட செய்திகள் எடப்பாடி இல்லத்தில் ஆலோசனை கூட்டம்… வெளியான தகவல்கள்… மூத்த தலைவர்கள் பங்கேற்ப்பு…!! Revathy Anish9 July 20240101 views சேலம் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் அடுத்து வரக்கூடிய 2026 தேர்தலில் வியூகங்கள், தி.மு.க., பா.ஜ.கவை சமாளிப்பது ஆகியவை குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த தேர்தலில் பெரும்பான்மை வாக்குகள் பெற்று ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்பட பலரும் பங்கேற்றனர்.