அரசியல் செய்திகள் செய்திகள் தேசிய செய்திகள் இஸ்லாமியர்களை குறிவைக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ… குற்றம் சாட்டும் காங்கிரஸ்… விடியோவால் சர்ச்சை…!! Revathy Anish18 July 20240193 views ராஜஸ்தான் மாநிலத்தின் பா.ஜ.க எம்.எல்.ஏ பால். முகுந்தாச்சாயா என்பவர் அண்மையில் மக்கள் தொகை குறித்து வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் குறிப்பிட்ட சமூகத்தினரால் நாட்டில் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக பேசியிருந்தார். இவரது இந்த கருத்து சர்ச்சையான நிலையில் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்லாமியர்களை குறி வைத்து பா.ஜ.க. அரசு உள்நோக்கத்துடன் செயல்படுவதாக அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமார் சர்மா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை அரசு கொண்டு வந்தால் அதனை ஏற்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.