செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர் அடுக்கடுக்காக எழுந்த புகார்… இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு அதிரடி மாற்றம்… எஸ்.பி. நடவடிக்கை…!! Revathy Anish16 July 2024087 views வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ராஜா என்பவர் பணிபுரிந்து வந்துருகிறார். இவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் தகாத வார்த்தையில் பேசுவதாகவும், அப்பகுதியில் ஸ்பா என்ற பெயரில் நடைபெற்ற பாலியல் தொழிலில் ஈடுபட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க தவறியதாகவும் அவர் மீது பல புகார்கள் மற்றும் விமர்சனங்கள் எழுந்தது. இது குறித்து விசாரித்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன் இன்ஸ்பெக்டர் ராஜாவை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் சற்று பரபரப்பு ஏற்படுத்தியது.