செங்கல்பட்டு செய்திகள் மாவட்ட செய்திகள் பழுதடைந்து நிற்கும் வாகனம்…சுற்றுலா பயணிகள் அவதி… அதிகாரிகளிடம் கோரிக்கை…!! Revathy Anish1 July 20240100 views மாமல்லபுரத்தில் உள்ள சிற்ப கலைகளை கண்டு ரசிக்க தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் எளிதாக செல்லும் வகையில் தொண்டு நிறுவனம் சார்பில் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டது. தற்போது அந்த பேட்டரி வாகனத்தை தொல்லியல் துறையினர் முறையான பராமரிக்காததால் பழுதடைந்து சாலையோரத்தில் பலமாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் அவதிப்படுவதால் அந்த பேட்டரி வாகனம் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை தூளாக்கும் இயந்திரத்தை மீண்டும் சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.