செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்… விரைந்து சென்று தீவிர சோதனை… மர்மநபருக்கு வலைவீச்சு…!! Revathy Anish17 July 2024074 views சென்னை ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி நகரில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியும், மயிலாப்பூரில் வித்தியா மந்திர் பள்ளி என 2 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த 2 பள்ளிக்கும் இ-மெயில் மூலம் அதிகாலை 2 மணிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் மிரட்டல் விடுத்தனர். இதனை அறிந்த காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் பள்ளிக்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து மோப்பநாய் உதவியுடன் பள்ளி முழுவதிலும் உள்ள அனைத்து இடங்களில் தீவிர சோதனையில் மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை அந்த மிரட்டல் போலியானது என தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,