செய்திகள் திருநெல்வேலி மாவட்ட செய்திகள் வீட்டை சுற்றி ஓடும் கரடிகள்… அச்சத்தில் பொதுமக்கள்… நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!! Revathy Anish4 July 2024091 views திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா என பல வனவிலங்குகள் வசித்து வருகிறது. கடந்த சில தினங்களாக வன விலங்குகள் மலையடிவாரத்தில் இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் கோட்டை விளைப்பட்டி கிராமத்தில் கரடிகள் ஜோடி ஜோடியாக உலா வருவதாகவும், பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் கரடிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.