கஞ்சா போதையில் தகராறு… மடக்கி பிடித்த பொதுமக்கள்… வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு…!!

தேனி மாவட்டம் கருங்காட்டான்குளம் பகுதியில் வசித்து வரும் செல்வம் என்பவர் அப்பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தினரு இவர் சீப்பாலக்கோட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த வாலிபர்கள் 2 பேர் செல்வம் பைக் மீது மோதினர். இதனால் செல்வம் அவர்களை கண்டித்துள்ளார்.

அப்போது அந்த வாலிபர்கள் செல்வத்தை தாக்கி தகாத வார்த்தையில் பேசினர். மேலும் அவர்கள் கஞ்சா போதையில் இருந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் வாலிபர்களை பிடித்து சின்னமனூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து காயமடைந்த செல்வத்தையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அந்த வாலிபர்கள் கே.கே.பாட்டியை சேர்ந்த விக்னேஷ்(22), நவீன்(22) என்பது தெரியவந்தது. இந்நிலையில் விபத்தில் காயம் அடைந்த வாலிபர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!