செய்திகள் தேசிய செய்திகள் ஆம்புலன்ஸ்-லாரி மோதல்… 6 பேர் உயிரிழப்பு… மேற்கு வங்கத்தில் பயங்கர விபத்து…!! Revathy Anish13 July 20240105 views மேற்கு வங்கம் மெடினிபூர் மாவட்டம் கிர்பா பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருந்து அபர்ணா என்ற நோயாளியை ஆம்புலன்ஸ் மூலம் மெடினிபூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அழைத்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் செல்லும் வழியே சாலையில் எதிரே வந்த லாரி ஒன்று ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் ஆம்புலன்சில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே துடித்து விட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் நோயாளி அபர்ணா தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.