செய்திகள் மாநில செய்திகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி… செந்தில் பாலாஜி உடல்நிலையில் முன்னேற்றம்…!! Revathy Anish22 July 20240128 views சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டு ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டு இசிஜி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மருத்துவர்கள் செந்தில் பாலாஜியின் உடல் நலத்தை கண்காணித்து வருகின்றனர்.