செய்திகள் திருநெல்வேலி மாவட்ட செய்திகள் உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!! Revathy Anish4 July 20240105 views மாஞ்சோலை மற்றும் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு பகுதிகளை சேர்ந்த தேயிலை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எங்களுடைய குத்தகை காலம் முடிவடையும் முன்பே வெளியேற்றுவதாக வேதனையுடன் அவர்கள் தெரிவித்துள்ளனர். மாஞ்சோலைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்திய குடியரசு கட்சி சார்பில் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். மேலும் தேயிலை தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு பட்டியல் சமூகத்துக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.