செய்திகள் தென்காசி மாவட்ட செய்திகள் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடித்தபசு திருவிழா… அரசியல் பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் வழிபாடு…!! Revathy Anish11 July 2024089 views தென்தமிழகத்தில் புகழ்பெற்ற சிவா தளங்களில் ஒன்றான தென்காசியில் உள்ள சங்கரநாராயண சாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்தபசு விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டும் கோலாகலத்துடன் கொண்டப்படவுள்ளது. அதன்படி இன்று அதிகாலை 5 மணிக்கு கோமதி அம்மாள் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியுள்ளது. இதை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரண்டு வந்தனர். இந்த கொடியேற்றத்தின் போது தென்காசி எம்.பி. டாக்டர் ராணிஸ்ரீ குமார், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.எல்.ஏ. ராஜா என பல நிர்வாகிகளும் பங்கேற்று தரிசனம் செய்தனர்.