செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம் குளிர்பானம் குடித்த வாலிபர்… சிறிது நேரத்தில் நடந்தது என்ன…? விக்கிரவாண்டி அருகே சோகம்…!! Revathy Anish17 July 20240100 views சென்னை அம்பத்தூர் பகுதியில் செயல்படும் வரும் பல்பொருள் அங்காடியில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பிரசாத் என்பவர் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த பேருந்து விக்கிரவாண்டி அருகே உள்ள உணவகத்தில் நின்ற போது, அவர் அங்கிருந்த கடையில் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்திலேயே பிரசாந்த் அங்கேயே மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த விக்கிரவாண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரசாந்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பிரசாந்த் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.