ஈரோடு செய்திகள் மாவட்ட செய்திகள் யானையுடன் ஒரு செல்பி… எச்சரித்து அனுப்பிய வனத்துறையினர்… 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!! Revathy Anish17 July 2024086 views ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறி சாலையில் சுற்றி இருந்தது. அந்த யானை தேவர் மலையில் இருந்து தாமரை கரை செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை அங்கே நிறுத்திவிட்டு யானை செல்லும் வரை காத்திருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நபர் யானை அருகே சென்று செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து வெகு நேரம் ஆகியும் யானை அங்கிருந்து செல்லாததால் வனத்துறை துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் சிறிது நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் அனுப்பிவிட்டனர். மேலும் ஆபத்தை உணராமல் யானையுடன் செல்பி எடுத்த நபரை எச்சரித்து அனுப்பினர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.