செய்திகள் தெற்கு மாவட்டம் தென்காசி மாவட்ட செய்திகள் தண்டவாளத்தில் விழுந்த பாறை… டிரைவரின் சாமர்த்தியம்… பயணிகளிடையே பரபரப்பு…!! Revathy Anish11 July 2024082 views குருவாயூரில்-மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் தினந்தோறும் செங்கோட்டை, தென்காசி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல நேற்று குருவாயூரில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட ரயில் மதியம் 3 மணி அளவில் செங்கோட்டை தென்மலை-கழுதுருட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு பாறை ஒன்று உருண்டு வந்து தண்டவாளத்தின் மீது விழுந்தது. இதனை பார்த்த எஞ்சின் துரிதமாக செயல்பட்டு உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து அவர் அளித்த தகவலின் அடிப்படையில் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் விழுந்த பாறையை அகற்றினர். இதனால் 1 மணி நேரம் ரயில் தாமதமானது. இச்சம்பவம் ரயிலில் இருந்த பயணிகளிடையே சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.