சிவகங்கை செய்திகள் மாவட்ட செய்திகள் கீழடியில் கிடைத்த ஆட்டக்காய்… மேம்பட்ட நாகரிகம் இருந்ததற்கான சான்று… தொல்லியல் துறை…!! Revathy Anish14 July 20240127 views சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தற்போது 10-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு யானை தந்தத்தில் செய்யப்பட்ட ஆட்டக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உருளை வடிவிலான இந்த ஆட்டக்காயின் தலைப்பகுதி 1.5 செ.மீ. விட்டமும், அடிப்பகுதி 1.3 செ.மீ விட்டமும் உள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறும் போது, கீழடியில் பழங்காலத்திலேயே மேம்பட்ட நாகரிகம் நடைமுறையில் இருந்ததற்கான சான்றாக இந்த தந்தத்திலான ஆட்டக்காயை கருதலாம் என தெரிவித்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.