செய்திகள் மயிலாடுதுறை மாவட்ட செய்திகள் ஆடு மேய்க்க வந்த சிறுமி… காவல் அதிகாரியின் கொடூர செயல்… மயிலாடுதுறை அருகே பரபரப்பு…!! Revathy Anish16 July 20240118 views மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பெரம்பூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக திருநாவுக்கரசு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். தம்பவத்தன்று குடியிருப்பு பகுதியில் ஆடு மேய்க்க வந்த சிறுமிக்கு மதுபானம் கலந்த குளிர்பானம் கொடுத்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியராஜ் திருநாவுக்கரசு மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் பெரம்பூர் காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி மீனா திருநாவுக்கரசை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.