செய்திகள் தருமபுரி மாவட்ட செய்திகள் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ… வேண்டியது நடக்கும்… பூஜை செய்து வழிபட்ட குடும்பத்தினர்…!! Revathy Anish22 July 20240134 views அரிய வகை பூக்களில் ஒன்றாக பிரம்ம கமலம் என்ற பூவும் உள்ளது. இதை “நிஷா காந்தி” என்றும் அழைப்பார்கள். இந்த பூ அமெரிக்கா மெக்சிகோவை பிறப்பிடமாக கொண்டுள்ளது. ஆண்டுக்கு ஒரே ஒருமுறை ஜூலை மாதத்தில் இந்த பூ பூக்கும். வெண்ணிறத்தில் மூன்று இதழ்களை கொண்ட இந்த மலர் மிகவும் அழகான தோற்றத்தை கொண்டுள்ளது. இந்த பிரம்ம கமலம் மலர் ஆன்மீக ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் வசித்து வரும் ஐயப்ப குருசாமி என்பவர் வீட்டில் பிரம்ம கமலம் செடியை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் செடியில் இரண்டு பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்துள்ளது. இதனை பார்த்து மகிழ்ச்சி அடைந்த குடும்பத்தினர் பூக்களுக்கு பூஜை செய்து வேண்டிக் கொண்டனர். இந்த பூக்கள் மலரும் போது என்ன வேண்டினாலும் நடக்கும் என்பது நம்பிக்கை. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் அந்த பிரம்ம கமலம் மலரை பார்த்து சென்றனர்.