செய்திகள் சேலம் மாவட்ட செய்திகள் அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கு… தலைமறைவான தி.மு.க. கவுன்சிலர்… சேலம் அருகே பரபரப்பு…!! Revathy Anish7 July 20240120 views சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி காமராஜர் நகரில் வசித்து வந்த அ.தி.மு.க செயலாளர் சண்முகம் கடந்த 3-ஆம் தேதி அவரது வீட்டின் முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமார் உள்பட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கவுன்சிலர் தனலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி, அஜீத், மகேந்திரன் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் பாலக்காட்டில் இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.