செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் தேரின் மீது மோதிய கார்… மது அருந்தியதால் விபரீதம்… ராஜபாளையத்தில் பரபரப்பு…!! Revathy Anish24 June 2024090 views தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஜெய் கணேஷ்(25) என்பவர் அவரது நண்பர்களுடன் சிவகிரிக்கு சென்ற நிலையில் அங்கு வேலை முடிந்ததும் மீண்டும் காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர பாரில் ஜெய் கணேஷ், வனராஜ், சுப்புராஜ், மகேஷ் ஆகியோர் மது அருந்திவிட்டு மீண்டும் தென்காசிக்கு புறப்பட்டனர். இந்நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் தேவதானம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஜெய் கணேஷ் மது போதையில் தாறுமாறாக காரை இயக்கியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த பிரசித்தி பெற்ற நாச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான தேரின் மீது மோதியதில் ஜெய்கணேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். மேலும் அவரது நண்பர்களான வனராஜ், சுப்புராஜ், மகேஷ் ஆகியோர் பலத்த காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தேவதானம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேரின் மீது கார் மோதியதில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.