செய்திகள் திருநெல்வேலி மாவட்ட செய்திகள் குடியிருப்புக்குள் புகுந்த கரடி… மரத்திலிருந்து கீழே வராமல் அட்டகாசம்… பொதுமக்கள் அச்சம்…!! Revathy Anish25 July 2024089 views நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு அடிக்கடி வனவிலங்குகள் வந்து செல்வது வழக்கமாகி வருகிறது. சம்பவத்தன்று காலை வனப்பகுதியில் இருந்து கரடி ஒன்று குடியிருப்புகள் புகுந்தது. அங்கிருந்த தமிழ்நாடு 9-ஆம் அணி பாட்டாலியன் கமாண்டர் வீட்டில் புகுந்து மேலே ஏறி அருகில் இருந்த மரத்தின் மீது ஏறியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பயத்தில் வீட்டிற்கு சென்று கதவை பூட்டி கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் சில நேரம் போராடி கீழே வராமல் இருந்த கரடியை வனப்பகுதிக்குள் விரட்டினர். மேலும் கரடி நடவடிக்கைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.