செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் நண்பருடன் சேர்ந்து 14 வயது சிறுவன் செய்த செயல்… மிரண்டு போன மக்கள்… 3 பேர் படுகாயம்…!! Revathy Anish17 July 20240106 views சென்னை ஜாம்பஜார் பாரதி சாலையில் மாலை 6 மணி அளவில் திடீரென ஒரு கார் வேகமாக வந்து அப்பகுதியில் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் பொதுமக்கள் என்றும் பாராமல் இடித்துவிட்டு சென்றது. இதனை பார்த்து போலீசார் உடனடியாக அந்த காரை துரத்தி சென்று பிடித்தனர். அப்போது காரை ஓட்டியது 14 வயது சிறுவன் என்பது தெரிய வந்துள்ளது. இந்த விபத்தால் அப்பகுதியில் இருந்த 3 பேருக்கு காயம் மற்றும் 5 இரு சக்கர வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து சிறுவரிடம் விசாரித்தபோது அவர் தனது பெரியப்பாவின் காரை நண்பருடன் சேர்ந்து ஒட்டி வந்து தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.