செய்திகள் மாநில செய்திகள் ஒரே நாளில் 500 கலைஞர் நாணயங்கள் விற்பனை… விலையை குறைக்க தொண்டர்கள் கோரிக்கை…!! Revathy Anish22 August 2024081 views சென்னையில் வைத்து கடந்த 18-ஆம் தேதி மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவரது உருவம் குறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயம் 10,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இதனை அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் அண்ணா அறிவாலயத்திற்கு சென்று வாங்கி செல்கின்றனர். நேற்று ஒரே நாளில் 500 நாணயங்கள் 50 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து தொண்டர்கள் கூறுகையில் வசதி படைத்த நிர்வாகிகள் கலைஞர் நாணயத்தை வாங்கி செல்கின்றனர். எனவே சாதாரண தொண்டர்கள் வாங்கும் வகையில் நாணயத்தின் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.