ஈரோடு செய்திகள் மாவட்ட செய்திகள் 5 மணி நேர போராட்டம்… தோட்டத்தில் புகுந்த காட்டு யானை… விவசாயிகள் வேதனை…!! Revathy Anish6 July 2024094 views ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள 10 வனசரகங்களில் பல வகையான வனவிலங்குகள் வசித்து வருகிறது. இந்த விலங்குகள் அவ்வப்போது அருகில் இருக்கும் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை அச்சுறுத்துவது, விளை நிலங்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சிக்கள்ளி கிராமத்தில் வசித்து வரும் சங்கர் என்பவரின் கரும்பு தோட்டத்திற்குள் 4 காட்டு யானைகள் புகுந்து 1 ஏக்கர் கரும்பு பயிரை சேதப்படுத்தியது. இதனை அறிந்த ஊர் மக்கள் 5 மணி நேரம் போராடி 4 காட்டு யானைகளை வனப்பகுதியில் விரட்டினர். இதுகுறித்து விவசாயிகள் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும் எனவும், சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.