கோயம்புத்தூர் செய்திகள் மாவட்ட செய்திகள் தீ விபத்தால் பலியான 4 நண்பர்கள்… மேலும் 2 பேர் கவலைக்கிடம்…சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish18 July 2024089 views கோவை மாவட்டம் சூலூர் முத்துகவுண்டன் புதூர் பகுதியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 7 வாலிபர்கள் வாடகைக்கு அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர். சம்பவத்தன்று அவர்கள் அறையில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது ஒருவர் 10 லிட்டர் பெட்ரோலை ஒரு பிளாஸ்டிக் கேனுக்கு மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பெட்ரோல் கேஸ் அடுப்பில் தெரித்ததால் திடீரென தீ பற்றி வீடு முழுவதும் எறிய தொடங்கியது. இந்த விபத்தில் அழகர்ராஜா, சின்ன கருப்பு, முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த வீரமணி என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். தற்போது தினேஷ்குமார், மனோஜ், பாண்டீஸ்வரன் ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.