செய்திகள் திருச்சிராப்பள்ளி மாவட்ட செய்திகள் ஏற்கனவே 2 மனைவிகள்… 3-வதாக சிக்கிய இளம்பெண்… ஓடிப்போய் திருமணம் செய்த டிரைவர்…!! Revathy Anish12 July 20240126 views திருச்சி மாவட்டம் கூத்தூர் பகுதியில் சுல்தான் பாஷா(56) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் சுல்தான் பாஷா சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் போது கொண்டபாளையம் பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து 2 தினங்களுக்கு முன்பு இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட நிலையில் சுல்தான் பாஷா அந்த பெண்ணை அழைத்து கொண்டு கூத்தூருக்கு வந்துள்ளார். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுல்தான் பாஷா பணிபுரியும் துவரங்குடி அரசு பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் எங்கள் மகளை மீட்டு தரக்கோரி பெண்ணின் பெற்றோர் கூறினார். அதற்கு போலீசார் அவர்கள் சொந்த ஊரான புழுதிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். ஏற்கனவே 2 மனைவிகள் உள்ள நிலையில் மகள் வயது இருக்கும் பெண்ணை 3-வதாக திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.