செய்திகள் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் தினமும் 2 ரவுடிகள்… தீவிர கண்காணிப்பில் போலீசார்… காவல் ஆணையரின் அதிரடி உத்தரவு…!! Revathy Anish16 July 2024092 views சென்னை மாநகர காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து ரவுடிகளை ஒழிக்க அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார். அவர் உத்தரவின் அடிப்படையில் சென்னை காவல் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கும் ரவுடிகளின் பட்டியலை தயாரிக்க வேண்டும். தினந்தோறும் 2 ரவுடிகள் என தேர்ந்தெடுத்து அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகிறார்களா என்றும் ரவுடிகள் மற்றும் அவரது உறவினர்களுக்கு அறிவுரை தர வேண்டும். இதனையடுத்து ரவுடிகள் சட்ட விரோத மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்களின் ஜாமின்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதுபோல் ரவுடிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பாக காவல் ஆணையர் அருண் போலீசாருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.