செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை…!! Revathy Anish26 July 20240141 views விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள டீ.நல்லாளம் பகுதியில் மகேந்திரன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி ஒருவரை மகேந்திரன் அப்பகுதியில் உள்ள குட்டைக்கு மீன் பிடிக்க செல்லலாம் என அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த பின் அந்த குட்டை நீரிலே போட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் மகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா சிறுமிக்கு எதிராக வன்கொடுமை செய்த மகேந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், 8,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடாக அரசு வழங்க வேண்டும் என கூறினார்.