செய்திகள் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள் மேலும் 10 பேர் கைது… முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்… மீனவ மக்கள் வேதனை…!! Revathy Anish25 June 20240130 views நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து 10 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். ஏற்கனவே இலங்கை சிறையில் தமிழகத்தை சேர்ந்த 37 மீனவர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அனைத்து தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த சம்பவம் மீனவ மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.