செய்திகள் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் 10 கிலோ சந்தன மரம் பறிமுதல்… 3 பேர் கைது… மேலும் ஒருவருக்கு வலைவீச்சு…!! Revathy Anish24 August 20240114 views திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சந்தன மரங்களை வெட்டி ஆந்திராவிற்கு கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததது. அந்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சந்தன வேணுகோபாலபுரம் அருகே உள்ள காப்பு காட்டில் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்த கணேசன் ரவி ஏழுமலை ஆகிய மூன்று பேரை வனத்துறை கைது செய்துள்ளனர். அப்போது அவர்களிடம் இருந்து 10 கிலோ சந்தன மரத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் வனத்துறையினரிடம் இருந்து தப்பி ஓடிய ராசுகுட்டி என்பவரை அதிகாரிகள் வலை வீசி தேடி வருகின்றனர்