கடலூர் செய்திகள் மாவட்ட செய்திகள் உறங்கிக்கொண்டிருந்த 1 மாத குழந்தை…கடித்து குதறிய தெருநாய்… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!! Revathy Anish28 June 2024090 views கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொடிக்குளம் பகுதியில் ஒரு வீட்டில் பிறந்து 1 மாதமே ஆன குழந்தை படுத்து கொண்டிருந்தது. அவரது தாயார் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இருந்த தெருநாய் ஒன்று வீட்டிற்குள் நுழைந்து குழந்தையை கடித்து குதறியுள்ளது. குழந்தையின் சத்தம் கேட்டு தாய் ஓடி வீட்டிற்குள் வந்த அவர் நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் செல்லும் போது வழியிலேயே குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.