உலக செய்திகள் செய்திகள் ஸ்விக்கியில் சிறிய பங்குகளை வாங்கிய…. அமிதாப் பச்சனின் குடும்பம்…!!! Sathya Deva29 August 20240105 views இந்தியாவில் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களில் ஸ்விக்கி, ஜொமோட்டோ போன்றவை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதற்கு பலரும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் குடும்ப அலுவலகம் ஸ்விக்கியில் சிறிய பங்குகளை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமிதாப் பச்சன் நீண்ட காலமாக இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார், அதிலும் குறிப்பாக டிஜிட்டல் டெக் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல துறை நிறுவனங்களில் முதலீடு செய்வது அதிகம். அமிதாப் பச்சன் பாலிவுட் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சினிமாவை காட்டிலும் ரியல் எஸ்டேட் மற்றும் பங்கு முதலீட்டு வாயிலாகவே அதிகளவில் சம்பாதிக்கிறார்.