செய்திகள் மாநில செய்திகள் ஸ்கேட்டிங் ஸ்டண்ட்…கை கால் போன பரிதாபம்….!!! Sathya Deva28 July 20240104 views மும்பையை சேர்ந்த பர்கத் ஆசம் ஷேக் என்ற இளைஞர் ஸ்கேட்டிங் ஸ்டண்ட் செய்து வந்துள்ளார். அவர் இந்த மாத துவக்கத்தில் ரயிலில் ஸ்கேட்டிங் ஸ்டண்ட் செய்து விடியோவை சமூக வலைத்தளங்களின் பதிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதனால் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரை தேடி வந்தனர். ஆனால் அப்போது தான் ஏப்ரல் 14 அன்று மஸ்ஜித் ரயில் நிலையத்தில் ஸ்டண்ட் செய்ய முயற்சித்த போது ஒரு கால் மற்றும் கையை இழந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ ஒன்றை அதிகாரிகள் வெளியிட்டனர்.அதில் ஷேக் அவரது ஒருபுறம் கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். அப்போது ஷேக் இந்த செயல்களை செய்ய வேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் இது சட்டவிரோதமானது மட்டுமல்ல ஒரு ஆபத்தானது என்று அவர் கூறியிருக்கிறார்.