உலக செய்திகள் செய்திகள் வேகமாக பரவும் குரங்கு அம்மை… அதிகாரிகள் எச்சரிக்கை…!!! Sathya Deva20 August 2024069 views மத்திய ஆப்பிரிக்காவில் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று காங்கோ ஜனநாயக குடியரசில் பரவத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த பாதிப்பினால் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவாமல் இருக்க விமான நிலையம், துறைமுகங்கள் மற்றும் எல்லை அதிகாரிகள், வங்கதேச மற்றும் பாகிஸ்தான எல்லைகளை எச்சரிக்கையாக இருக்கும்படி உத்தரவிட்டுள்ளது, மத்திய மருத்துவமனைகளில் குரங்கு அம்மையார் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு அமைச்சகம் புதிய வைரஸ் குறித்து நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியது. இந்த வைரஸ் முந்தைய குரங்கு அம்மை வைரஸிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது என்றும் கொரோனா வைரசுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியிருந்தனர். இந்த குரங்கு அம்மையின் அறிகுறிகள் சிக்கன் பாக்ஸை போன்றது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த வைரசினால் இறப்புகள் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்றும் இந்தியாவை பாதிக்கும் வாய்ப்பு குறைவு என்று குறிப்பிடப்படுகிறது.